பிராண்ட் அம்பாசிட்டராக சினிமா, விளையாட்டு நட்சத்திரங்களை வைத்து விளம்பரங்களை எடுக்கும்போது தன்னையே நட்சத்திர பிம்பமாய்க் காட்டி, அதில் வெற்றி பெற்றவர் ஹெச். வசந்தகுமார்.
தமிழகத்தில் டிவி, பிரிட்ஜ், வாசிங்மெசின் போன்ற மக்கள் வீட்டு உபயோகப் பொருட்களை தவணைமுறையில் அவருக்கு கொடுத்து மாதா மாதம் கட்டுமாறு கூறிய திட்டமே அவருக்கு வெற்றிக்குக் காரணம். வியாபாரத்தில் மட்டும் நில்லாது மக்களுக்காக கன்னியாகுமரி தொகுதியில் நின்று எம்பியாகப் பொறுப்பேற்று மக்கள் தொண்டாற்றி வந்தவர் கொரோனாவால உயிரிழந்தது தமிழகத்திற்கே பெரும் இழப்புதான்.