தமிழ்நாட்டிலும் புல்டோசர் ஆட்சி வரும்: ஹெச்.ராஜா ஆவேச பேட்டி..!

புதன், 9 ஆகஸ்ட் 2023 (12:58 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிரவாதம் அல்லது வன்முறை செய்பவர்களின் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் புல்டோசர் ஆட்சி வரும் என பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
விருதுநகர் பாஜக அலுவலகத்திற்கு போலீசார் வந்து பாரதமாதா அன்னை சிலையை திருடி சென்றுள்ளனர் என்று கூறிய ஹெச்.ராஜா  இதனை அடுத்து தமிழ்நாட்டில் புல்டோசர் ஆட்சி வராது என்று நினைக்காதீர்கள் கண்டிப்பாக புல்டோசர் ஆட்சி வரும் என்று கூறினார்.
 
இந்த நிலையில் ஹெச்.ராஜாவின் இந்த பேச்சு வரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எச். ராஜாவின் இந்த பேச்சுக்கு திமுக பிரமுகர்கள் தக்க பதிலடி கொடுப்பார்களா என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம்
 
 விருதுநகர் பாஜக அலுவலகத்தில் அனுமதி இன்றி பாரதமாதா சிலை வைத்துள்ளதாக போலீசார் அந்த சிலையை அகற்றியதற்கு ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்