சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தன் மீது 100 கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அளவுக்குத்தான் வொர்த் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு முதலமைச்சராவதற்கு தகுதியோ, ஆசையோ எனக்கு இல்லை, மாறாக முதலமைச்சரை உருவாக்கவே விவசாயியான நான் தொட்டாம்பட்டியில் இருந்து சென்னை வந்துள்ளேன் எனவும் கூறினார்.