தமிழக சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலை துறை சார்பாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மொட்டை அடிக்க பக்தர்களுக்கு இலவசம் என்றும் மொட்டை அடிப்பவர்களுக்கு கோவில் நிர்வாகத்திடம் இருந்து ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்
இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறிய போது நம்மை மொட்டை அடிப்பதற்கு ஆகவே மொட்டை இலவசம் என திமுக அரசு அறிவித்து உள்ளது என்று கூறினார். மேலும் கடவுள் இல்லை என்று சொல்வோர் பேரவையில் கடவுள் பற்றிய இவ்வாறு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்