தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. தமிழ்நாட்டில் வருகிற செப்யம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டங்களிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
அதில் செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவும் அடங்கும். ஆம், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கலாம். தடை விதிப்பது அவசியமற்றது என முன்னர் கூறி இருந்தார். இப்போது தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கண்டிப்பாக நடைபெறும். விநாயகரை வைத்து அரசியல் செய்தால் அதே விநாயகர் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எழுவார் என குறிப்பிட்டுள்ளார்.