இந்நிலையில் நேற்று மாலை பிரியாணி செய்து கொண்டிருந்த நாகூர் கனி இடையே ஓய்வாக அருகில் இருந்த ஆட்டோ ஒன்றில் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த கும்பல் நாகூர் கனியை ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்து பட்டாக்கத்தியால் சரமாரியா வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் நாகூர் கனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்ட மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் நாகூர் கனி உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மக்கள் நடமாடும் பகுதியில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.