சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை அளித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி சாலை திட்டம் போன்ற திட்டங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், தமிழ்நாடு தன்னுடைய சொந்த நிதியை வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும், பேரிடர் மேலாண்மையை பொறுத்தவரை மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் மழை போன்றவற்றிற்கு ரூ.18,000 கோடி அளவிற்கு நிதி கேட்கப்பட்டிருந்த நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என குறிப்பிட்டார்.
அதேப்போல், மக்கள் ஆதரவு திமுக அரசுக்கு இருப்பதால் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த நிமிடம் வரை கூட மத்திய அரசு 10 பைசா கூட நிதி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.