இந்த நிலையில் அலுவலகங்களை அடுத்து தமிழகத்திலேயே முதல் முறையாக மாணவ - மாணவிகளுக்கான தானியங்கி வருகைப் பதிவு வசதி கொண்டு வரப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களின் வருகை குறித்து குறுஞ்செய்தி மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கும் வசதியும் வரவுள்ளது. முதல்கட்டமாக போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
பள்ளி மாணவ மாணவிகளின் அடையாள அட்டையில் சிப் பொருத்தப்பட்டு, அவர்களின் பெற்றோர் எண்கள் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கும். பள்ளி நுழைவு வாயிலில் ரேடியோ அலைகள் பாய்ந்து கொண்டிருக்கும் கருவிகள் வைக்கப்பட்டிருப்பதால் இதன் வழியாக அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்கள் அந்த சாதனத்தை கடந்து செல்லும்போது அவர்களுடைய வருகையும் பள்ளியில் இருந்து வெளியேறும் போது தானாகவே பதிவு செய்யப்பட்டு விடும். இதனையடுத்து உடனடியாக பெற்றோர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும்.