கொரோனா காரணமாக தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் கலை அறிவியல், தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் பொறியியல் படித்து வரும் மாணவர்களில் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதை தொடர்ந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் பலர் போஸ்டர் ஒட்டினர். இந்நிலையில் அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். “அனைத்து அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்குவதால் கல்வி தரம் பாதிக்கும். மேலும் அனைத்து பாடங்களையும் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவர். எனவே தமிழக அரசின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.