இதனை அடுத்து அவர் சாலையில் அமர்ந்து ஜனநாயகம் இறந்து விட்டதாக கூறி கோஷமிட்டதை அடுத்து அவரை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது 1996 ஆம் ஆண்டு முதல் வேட்புமனு செய்து வருகிறேன், 1997 ஆம் ஆண்டு ஆறாவது வார்டில் கவுன்சிலர் ஆக வெற்றி பெற்றேன்
மாமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை பல தேர்தலில் நான் போட்டியிட்டு இருக்கிறேன், ஜனநாயக முறைப்படி யாரும் இல்லை, ஜனநாயகத்தின் மக்கள் வாக்களிக்க பணம் பெற்று வருகின்றனர், ஜனநாயகம் செத்துவிட்டது என்று கூறினார்.