தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால், சென்னையில் இருந்து பேருந்து, ரயில், விமானம் உள்பட பல்வேறு வழிகளில் லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்.
இந்த நிலையில், சொந்த காரில் சொந்த ஊருக்கு செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அந்த பகுதியில் அதிக போக்குவரத்து இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு பதிலாக, சென்னையில் இருந்து திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், தேவைக்கேற்ப தனியார் பேருந்துகளையும் தமிழக அரசு இயக்க உள்ளதாகவும், இது குறித்து தனியார் பேருந்துகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தனியார் பேருந்துகளை அரசு இயக்கும் நிலையில், தனியார் நிறுவன ஓட்டுநர்கள் நடத்துனர்களால் இயக்கப்படுவதால் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி அளித்துள்ளார்.