தமிழத்தில் திமுக காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் மதிமுக ஒரு அணியாவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அதிமுக, பாஜக, தேமுதி, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து மற்றொரு அணியாக போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. இதில் அதிமுக பாஜக கூட்டணி ஏறக்குறைய அறிவிக்கபடாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் அதிமுக மற்றும் மத்தியில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்தின் தேமுதிக கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுதிஷ் பேசுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை நன்றாக உள்ளது. இந்த மாதம் இறுதியில் சிகிச்சை முடிந்ததும் அவர் சென்னை திரும்புகிறார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் கூட்டணி குறித்து நட்பின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். . மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
விஜயகாந்த் வந்த பின்னர் தான் கூட்டணி குறித்து உறுதி செய்வோம். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் வலிமையானதாக இருக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார்.