ஒரே நாளில் முடிந்த நேர்காணல்: விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல்!

வியாழன், 4 மார்ச் 2021 (21:36 IST)
அதிமுகவில் போட்டியிட விரும்பும் விருப்ப மனுக்கள் நேற்று வரை பெற்ற நிலையில் இன்று ஒரே நாளில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது
 
சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை முதல் நடந்த வேட்பாளர்கள் நேர்காணல் சற்றுமுன் முடிவடைந்தது. இந்த நேர்காணலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் நடத்தினார்கள்
 
இந்த நேர்காணல் சற்றுமுன் முடிந்த நிலையில் வேட்பாளர் குறித்த பட்டியல் இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் நடந்த தேர்தலில் அதிமுக தான் முதலாவதாக வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்ற நிலையில் இந்த முறையும் அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்