அதானி - செபி தொடர்பு.. அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும்! அண்ணாமலை அதிரடி! காங்கிரஸ் ஆதரவு!

Prasanth Karthick

ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (17:52 IST)

அதானி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு பங்குகள் ரீதியா தொடர்புள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதை காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

 

 

பிரபலமான இந்திய நிறுவனமான அதானி நிறுவனம் பங்குச்சந்தை மோசடிகளில் ஈடுபடுவதாக முன்னதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டி இருந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இந்த குற்றச்சாட்டை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையனாம செபி (SEBI விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

ஆனால் தற்போது ஹிண்டென்பெர்க் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் செபி தலைவரே அதானி நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது மேலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, “அவர்கள் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகிறார்கள் என்று ஒதுங்கிவிடமுடியாது. இதுகுறித்து அரசுதான் முழுமையான விசாரணையை நடத்தி உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.

 

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து சொன்ன காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் “செபி தலைவர் மாதபி புச் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என அண்ணாமலை பேசியதை வரவேற்கிறோம். பிரதமர் மோடி தனது கட்சி மாநிலத் தலைவரின் பேச்சைக் கேட்க வேண்டும். நாடாளுமன்றத்தில் கூட்டுக் குழு உடனடியாக இதை விசாரிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

பாஜக தலைவரான அண்ணாமலையின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி வரவேற்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்