தமிழக முதல்வரை சந்தித்த நடிகை ரோஜா: இருமாநில பிரச்சனை குறித்து ஆலோசனை என தகவல்
திங்கள், 7 பிப்ரவரி 2022 (12:41 IST)
தமிழக முதல்வரை சந்தித்த நடிகை ரோஜா: இருமாநில பிரச்சனை குறித்து ஆலோசனை என தகவல்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை நடிகைரோஜா சற்றுமுன் சந்தித்துள்ளார் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கூறப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் நடிகர் விஜய்யை சந்தித்தார். இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சற்று முன் தமிழக முதல்வரை நடிகை ரோஜா சந்தித்துள்ளார்
ஆந்திர மாநில நகரி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ரோஜா தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்ததாகவும், முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாகவும் ரோஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
மேலும் தனது பகுதி நெசவாளர்கள் உற்பத்தி செய்தது சால்வையும் முதல்வருக்கு நடிகை ரோஜா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது