செல்பி எடுத்த இளைஞருக்கு புது செல்போன் வாங்கி தரும் சிவகுமார்
வியாழன், 1 நவம்பர் 2018 (09:23 IST)
மதுரையில் நடந்த விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டபோது செல்பி எடுக்க வந்த இளைஞர் ஒருவரின் செல்போனை அவர் தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த சம்பவத்திற்கு முதலில் விளக்கம் அளித்த சிவகுமார் அதன்பின்னர் வருத்தமும் தெரிவித்தார். இருப்பினும் சிவகுமார் மீதான நெட்டிசன்களின் விமர்சனங்களும், மீம்ஸ்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த செல்பி எடுத்த இளைஞர் சிவகுமார் தட்டிவிட்ட செல்போன் உடைந்துவிட்டதாகவும், அந்த போனின் விலை ரூ.19 ஆயிரம் என்பதால் தான் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்
இந்த பேட்டியை பார்த்த சிவகுமார், அந்த இளைஞரை தொடர்பு கொண்டு புதிய செல்போன் வாங்கி தருவதாக கூறியுள்ளாராம். இதனால் அந்த இளைஞர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.