கள்ளக்காதலால் உருவாகிய கருவை கலைக்க முயற்சித்த பெண் பரிதாப பலி

செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (08:58 IST)
திருவண்ணாமலையில் கருவை கலைக்க, நாட்டு மருந்தை சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
 
இந்நிலையில் கணவனை பிரிந்து இருக்கும் சுமதிக்கு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் சுமதி ஆறு மாதம் கர்ப்பமானார். சுமதி நாட்டு மருந்து மூலம் கருவை கலைக்க ஜெயலட்சுமி என்பவரை நாடினார். 
 
இதனையடுத்து ஜெயலட்சுமி கொடுத்த நாட்டு மருந்தை சுமதி சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்த சுமதி அங்கேயே இறந்தார். விஷயமறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்