சென்னை மெட்ரோ ரயிலில் தீப்பொறி! அலறியடித்து ஓடிய பயணிகள்! - பெரும் பரபரப்பு!

Prasanth Karthick

புதன், 10 ஜூலை 2024 (19:10 IST)

சென்னையில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மெட்ரோ ரயிலில் திடீரென தீப்பொறி பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போக்குவரத்திற்காக துவங்கப்பட்ட மெட்ரோ ரயில்கள் விம்கோ நகர் பணிமனை வரை நீல நிறப்பாதையிலும், செண்ட்ரல் வரை பச்சை நிற பாதையிலும் என இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. செண்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை பல முக்கிய வழித்தடங்களை இணைத்துள்ள மெட்ரோ ரயில் மூலமாக ஏராளமான மக்கள் தினசரி பயணிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று அவ்வாறாக விம்கோ நகர் பணிமனை ஸ்டேசனிலிருந்து விமான நிலையம் செல்லக்கூடிய நீல நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்தபோது உயர்நீதிமன்றம் நிறுத்தத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயிலின் பக்கவாட்டிலிருந்து தீப்பொறிகள் பறந்ததால் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர்.
 

ALSO READ: 68 இடங்களில் கொள்ளையடித்து ரூ.4 கோடிக்கு நூற்பாலை வாங்கியவர்.. குறி வைத்து பிடித்த போலீசார்..!

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள மெட்ரோ நிர்வாகம் இயந்திர கோளாறு காரணமாக ரயில் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் நீல நிறப்பாதையில் ரயில்கள் 10 நிமிடம் தாமதமாக புறப்படும் என்றும், பசுமை நிறப்பாதையில் ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என்றும் கூறியுள்ளது. இந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்