சட்டையில் பட்டன் இல்லை.. தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள்.. அதிர்ச்சி தகவல்..!

Siva

வியாழன், 11 ஏப்ரல் 2024 (15:59 IST)
சட்டையில் பட்டன் இல்லை என்பதால் ஒரு இளைஞரை மெட்ரோ அதிகாரிகள் ரயிலில் ஏறுவதை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுவது பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூரில் ஒரு பயணி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆடை தொடர்பான சர்ச்சையை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயில் ஏற வந்தபோது அவருடைய சட்டையில் இரண்டு பட்டன்கள் இல்லை என்றும் அதனை அடுத்து மெட்ரோ நிலைய அதிகாரி ஒருவரால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பதிவு செய்துள்ளார்

அந்த பயணி அப்பாவியாக ரயிலில் ஏற முடியாமல் நின்று கொண்டிருந்த நிலையில் அவருக்கு யாருமே உதவவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இது மெட்ரோ பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்வே அதிகாரி கூறிய போது ’பயணிகளிடம் நாங்கள் ஆண் பெண் ஏழை பணக்காரர் என்ற எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை

அந்த வீடியோ அன்று நடந்த சம்பவத்தின் ஒரு பகுதி தான், அந்த பயணி மீது மது வாசனை வந்ததால் தான் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். பட்டன் இல்லையே என்பதற்காக தடுத்து நிறுத்தப்படவில்லை

பெண்கள் குழந்தைகள் பயணம் செய்யும் மெட்ரோ ரயிலில் மது அருந்தி ஒருவர் பயணம் செய்தால் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் தடுத்த நிறுத்தப்பட்டார் என்று விளக்கம் கூறியுள்ளனர்.,

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்