கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், புதுப்பாளையம், தாளியூர் போன்ற பகுதிகளில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் உள்ள விலை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
அங்கிருந்து அரிசி, பருப்பு மூடைகளை தின்றுவிட்டு வீசி செல்கிறது. இதனால் அச்சத்தில் இருக்கின்ற அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.அவர்களிடம் போக்கு காட்டிக் கொண்டு அவர்களை ஏமாற்றி அருகில் இருக்கின்ற மலைப் பகுதியில் பதுங்கி கொண்டு இருக்கிறது.