முதியவரை தாக்கிய ஒற்றை காட்டு யானை..! கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி..!!

வியாழன், 21 டிசம்பர் 2023 (10:56 IST)
கோவை அருகே  ஒற்றை காட்டு யானை தாக்கியதில் சாலையில் சென்ற முதியவருக்கு கால் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
கோவை நரசிபுரம் விராலியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் உலா வருகிறது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சாலையில் நடந்து சென்ற 65 முதியவர் சின்னசாமி என்பவரை ஒற்றை காட்டு யானை தாக்கியது. இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள், காட்டு யானையை விரட்டிவிட்டு,  முதியவர் சின்னசாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்