ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனச்சரகத்துக்குட்பட்ட பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி வழியாக வந்த ஒற்றை காட்டுயானை அய்யன்பாளையம் கிராத்திற்குள் நேற்று அதிகாலை புகுந்தது. அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி வந்தது இதை கண்ட விவசாயிகள் விளாமுன்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்தும், சைரன் வைத்த யானை விரட்டும் வாகனத்தை கொண்டும் யானையை விரட்டியதில் கோபமடைந்த யானை செல்லும் வழியில் அங்கிருந்த வீடுகளையும், விவசாயிகளின் டிராக்டர்களையும் அடித்து சேதப்படுத்தியது.
இதையடுத்து யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட இரண்டு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்தனர். அதில் பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து கபில்தேவ் என்ற யானை வந்துள்ளது. மற்றொரு யானை இரவு வர உள்ளதாகவும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் ஒற்றை யானையை பிடிக்க வனப்பகுதிக்குள் செல்ல உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.