இன்று மாலை 12 மாவட்டங்களில் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran

திங்கள், 30 செப்டம்பர் 2024 (14:05 IST)
இன்று மாலை தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
உள் தமிழக பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் காரணமாக இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை உட்பட 12 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், நாளை மற்றும் நாளை மறுநாளும் தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்யும் என்றும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், இரவு மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்