ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு என அனைத்தையும் தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, என அனைத்தையும் சேர்த்து தாளிக்கவும்.
அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணெய் நன்கு திரண்டு வரும் வரையில் கொதிக்க விடவும். நன்கு கொதித்த பிறகு கடைசியாக கறிவேப்பிலை கொத்தமல்லியை தாளித்து கொட்டி இறக்கினால் சுவையான கிராமத்து கறிக்குழம்பு தயார்.