இலங்கை அருகே காற்றழுத்தத் தாழ்வு; தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

புதன், 2 ஜனவரி 2013 (10:33 IST)
FILE
மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை அருகே உருவாகி உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில், 2 நாட்கள் மழை பெய்தது. அதன்பிறகு மழை நின்று விட்டது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத நிலையில் தற்போது வங்க கடலில் இலங்கை அருகே மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து வருவதால் தென் மாவட்டங்களில் நாளை முதல் அனேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒருசில பகுதிகளிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் பரவலாகவும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்