எந்த காலத்திலும் இல்லாத அளவு மின்வெட்டு : திமுக குற்றச்சாட்டு
ஞாயிறு, 9 டிசம்பர் 2012 (11:10 IST)
FILE
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மின்வெட்டுப் உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து விவாதிப்பதற்காக திமுகவின் செயற்குழுக் கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் திமுகவினர் தங்கள் மாவட்டங்களில் உள்ள மின்வெட்டு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மின்வெட்டால் தமிழகத்தின் பொருளாதாரம் பின்னோக்கி இழுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.