ச‌த்‌தியம‌ங்கல‌த்‌தி‌ல் 19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு

சனி, 26 நவம்பர் 2011 (14:46 IST)
19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

webdunia photo
WD
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக 19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மற்றும் பள்ளச்சார குழந்தைகள் "நில வளத்தை மேம்படுத்துவோம். வரும் தலைமுறைக்காகவும் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் 196 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது.

இந்த மாநாட்டின் துவக்கவிழா சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியின் வேதநாயகம் கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர் பேராசிரியர் என்.மணி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது பே‌சிய அவ‌ர், மாணவ, மாணவிகள் பல நாட்களாக கஷ்டப்பட்டு செய்த ஆய்வு கட்டுரைகள் நல்ல செயல்களுக்கு உதவவேண்டும். கடுமையாக உழைக்க மாணவ, மாணவிகள் தயங்ககூடாது. வருங்காலத்தில் இதுபோன்ற பல ஆய்வுகளில் ஈடுபட வேண்டும் என்றார்.

விழாவிற்கு பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியின் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் முன்னிலை வகித்தார். மாநாட்டின் வரவேற்பு குழு செயலாளர் ஆர்.மணி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுசெயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் அறிவியல் பரப்புவது குறித்து பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் என்.மாதவன் அறிவியல் கல்வியும் பற்றி பேசினார்.

கருப்பொருள் அறிமுகம் குறித்து கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.மோகனா எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ.சண்முகம் வாழத்தி பேசினார். இறுதியில் மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.சுப்பிரமணியம் நன்றி கூறினார். விழாவில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லõரியின் தலைமை செயல் அலுவலர் முனைவர் ஏ.எம்.நடராஜன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி காளியண்ணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள 34 மாவட்டங்களை சேர்ந்த 1300 மாணவ, மாணவிகளும் 350 ஆசிரிய, ஆசிரியைகளும் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்