‌திருமாவளவனு‌க்கு ஆந்திர அரசு ‌விருது

புதன், 7 செப்டம்பர் 2011 (16:23 IST)
ஆந்திர அரசின் கலாச்சார மையம் சார்பில் ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல்.திருமாவளவனுக்கு அம்பேத்கர் தேசிய விருது இன்று வழங்கப்படுகிறது.

இது தொட‌ர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆந்திர அரசின் கலாச்சார மையமும் தலித்கலா மண்டலி நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் தலித் மக்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் தலைவர்களுக்கு 'அம்பேத்கர் தேசிய விருது' என்ற விருதை வழங்கி சிறப்பித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான 'அம்பேத்கர் தேசிய விருது' கடந்த கால்நூற்றாண்டு காலமாக தலித் மக்களின் விடுதலைக்காக களப்பணியாற்றி வருகிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு வழங்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணி அளவில் ஹைதராபாத்தில் நடைபெறும் விழாவில் இந்த விருதை ஆந்திர மாநிலத்தின் துணை முதலமை‌ச்சர் தாமோதரராஜ நரசிம்ம வழங்க தொல்.திருமாவளவன் பெற்றுக் கொள்கிறார். விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தலித் கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் எ‌ன்று வ‌ன்‌னிஅரசு கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்