புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை: 1,432 பே‌ர் மு‌ற்றுகை

வெள்ளி, 24 ஜூன் 2011 (11:11 IST)
புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவையை ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட 1,432 பே‌ர் மு‌ற்றுகை‌‌யி‌ட்டு போரா‌ட்ட‌த்‌‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

புது‌ச்சே‌ரி முதலமை‌ச்சராக பொறு‌ப்பே‌ற்ற ‌பி‌ன்ன‌ர் எ‌ன்ஆ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் ர‌ங்கசா‌மி பல அ‌திரடி நடவடி‌க்கை‌யி‌ல் ஈடுப‌‌ட்டா‌ர்.

கட‌ந்த ஆ‌ட்‌சி‌யி‌ல் முறைகேடாக ‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக கூ‌றி பொது‌ப்ப‌ணி‌த்துறை ஊ‌ழிய‌ர்க‌ள் 1,432 பேரை ப‌ணி‌நீ‌க்க‌ம் செ‌ய்து ர‌ங்கசா‌மி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌‌யி‌ல் ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட 1432 பே‌ர் இ‌ன்று காலை பு‌து‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை‌யை மு‌ற்றுகை‌யி‌ட்டு போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

‌‌பி‌ன்ன‌ர் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ன் அனை‌த்து வா‌‌யி‌ல்களையு‌ம் பூ‌ட்டி போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர். அ‌ப்போது, ‌மீ‌ண்டு‌ம் ப‌ணி‌யி‌ல் அம‌ர்‌த்த‌க் கோ‌ரி அவ‌ர்க‌ள் கோஷ‌மி‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்