மழை படிப்படியாகக் குறையும் - சென்னை வானிலை

ஞாயிறு, 5 டிசம்பர் 2010 (18:07 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கே ஆந்திராவை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் மழை படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும், ஆந்திர கடலோர மாவட்டங்களிலும், வட தமிழ்நாட்டிலும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவை நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதால் தென் தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்