கல்விக் கட்டணம் இணையதளத்தில் வெளியீடு

வெள்ளி, 22 அக்டோபர் 2010 (08:51 IST)
TNet
TNET
தனியாரபள்ளிகளுக்கநீதிபதி கோவிந்தராஜனகுழநிர்ணயித்கல்விககட்டணமதமிழஅரசினஇணையதளத்திலவெளியிடப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம், மாவட்டம், வகுப்பு வாரியாக 955 பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி அளித்த பரிந்துரையின் படி, தனியார் பள்ளிகளுக்கு அரசு, கல்விக்கட்டணத்தை நிர்ணயித்தது.

இதற்கிடையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சென்னை உள்பட பல இடங்களில் தனியார் பள்ளிகள் மேல் புகார்கள் எழுந்தன. மாணவர்களும், பெற்றோரும் ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற தொண்டு நிறுவனமும் அதைத்தொடர்ந்து அரசும் மேல்முறையீடு செய்தன.

பின்னர் இடைக்கால தடை நீக்கப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்விக்கட்டண விவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்திலும் பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

ஆனால், ஒரு சில பள்ளிகள் தான் கட்டண விவரங்களை மாணவர்கள், பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகையில் வெளியிட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிடவில்லை. கல்விக்கட்டண விவரங்கள் பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்தும் தொடர்ந்து வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

கல்விக்கட்டண விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் 3 நாளில் இணையதளத்தில் வெளியிடாவிட்டால் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்படும் என்று பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தமிழக அரசுக்கு 18ஆ‌ம் தே‌தி தா‌க்‌கீது அனுப்பினார். அவர் விதித்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த சூழ்நிலையில், கல்விக் கட்டண விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in ) நேற்று மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது? என்ற விவரம், மாவட்டம், வகுப்பு வாரியாக 955 பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்