‌வி.எ‌ன்.சுதாகரனு‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிடியாணை

திங்கள், 18 ஜனவரி 2010 (12:28 IST)
ஹெரா‌யி‌ன் வை‌த்‌திரு‌ந்த வழ‌க்‌கி‌ல் அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ‌ஜெயல‌லிதா‌‌வி‌ன் வள‌ர்‌ப்பு மக‌ன் வி.‌எ‌ன்.சுதாகரனு‌க்கு செ‌ன்னை போதை பொரு‌ள் தடு‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிடியாணை ‌பிற‌ப்‌பி‌‌த்து‌ள்ளது.

வீ‌ட்டி‌ல் ஹெரா‌யி‌ன் வை‌த்‌திரு‌ந்ததாக 2001ஆ‌‌ம் ஆ‌ண்டு ‌வி.எ‌ன்.சுதாகர‌ன் ‌ ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌‌திவு செ‌ய்தன‌ர்.

இ‌ந்த வழ‌க்‌கு செ‌ன்னை போதை பொரு‌ள் தடு‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் நட‌ந்து வரு‌கிறது. இ‌த‌னிடையே இ‌ந்த வழ‌க்‌கி‌ல் ஆஜராக சுதாகரனு‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் அழை‌ப்பாணை அனு‌ப்‌பி இரு‌ந்தது. ஆனா‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் சுதாகர‌ன் ஆஜராக‌வி‌ல்லை.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் இ‌‌ந்த வழ‌க்கு இ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது ‌வி.எ‌ன்.சுதாகர‌ன் ஆஜராகாததா‌ல் அவரு‌க்கு ‌பிடியாணை ‌பிற‌ப்‌பி‌த்து ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்