மழை பெய்ய வாய்ப்புள்ளது

வெள்ளி, 15 மே 2009 (17:51 IST)
தற்போதைய வானிலை நிலவரப்படி மே மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை ராஜ் கணித்துக் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ், தமிழ்.வெப்துனியாவிற்கு அனுப்பியுள்ள ஆய்வுக் கடிதத்தில், ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி கணித்து அனுப்பியபடி, இரண்டு நாள் தாமதமாக மே மாதம் 4ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்துள்ளது.

வானிலையில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாததால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை இல்லை.

இந்நிலையில், ஏற்கனவே கணித்து கூறியபடி, 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, விழுப்புரம், தஞ்சை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உட்பட தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்