விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 8ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வரும் மக்களவை தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதன் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை கடந்தவாரமே வெளியாவதாக இருந்தது, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தகளின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. மற்றொரு வேட்பாளர் யார் என்பது நாளை மறுநாள் தெரியவரும்.
தேர்தல் பணிகள் தொடர்பாக, இன்று காலை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய திருமாவளவன், இன்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார்.