தமிழக அரசு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் பிரமாண்ட பேரணி
சனி, 7 மார்ச் 2009 (19:23 IST)
சென்னை உயர் நீதிமன்றத்தில் புகுந்து வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந்த காவல்துறை உயரதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என்றும் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு கொடுக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ் கூறினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் களுக்கும், காவல்துறையி னருக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீகிருஷ்ண ாவின் இடைக்கால அறிக்கையை புறக்கணிப்பதாக வழக்கறிஞர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதையடுத்து அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்கான கூட்டம் சென்னை பார் கவுன்சிலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத ்தினரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வழக்கறிஞர் களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. மேலும் 22 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் பாதுகாப்பு குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு : நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் விமர்சனம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணா அறிக்கைய ை ஒட்டுமொத்தமா க புறக்கணிக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையை பொதுமக்கள் தெரிந்து கொள்ள அனைத்து நாளிதழ்களிலும் வெளியிட வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற வன்முறைக்கு காரணமான தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையை கண்டிக்கும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரும் 9ஆம் தேதி பொறுப்பேற்க உள்ள ஹேமந்த் லட்சுமணனுக்கு வரவேற்பு கொடுப்பதில்லை. ஆனாலும் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க 9 பேர் கொண்ட உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும். மேலும் ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்றார். ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களை சென்னைக்கு வரவழைத்து ஆளுநர் மாளிகை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என்றார். பேரணி முடிவில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந் த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு கொடுக்கப்படும் என்றும் இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பால்கனகராஜ் கூறினார்.
செயலியில் பார்க்க x