கட்டுரை போட்டியில் காமதேனு கல்லூரி மாணவி சாதனை

கோவை மண்டல அளவில் நடந்த கட்டுரை போட்டியில் சத்திய‌‌ம‌ங்கல‌ம் காமதேனு கல்லூரி மாணவி சாதனை படைத்துள்ளார்.

கோவையில் கொங்கு மண்டல அளவில் கட்டுரை போட்டி நடந்தது. இந்த கட்டுரைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தன்னம்பிக்கை சார்ந்த தலைப்பில் இந்த கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

webdunia photoWD
இந்த கட்டுரை போட்டியில் சத்தியமங்கலம் காமதேனு கல்லூரி மாணவ, மாணவிகள் இருபத்தி ஆறு பேர் கலந்துகொண்டனர். இதில் கீதா, கார்த்திகேயன், ஷர்மிளா, ஜூலியட்மேரி, ரஞ்சித்குமார் ஆகிய ஐந்து பேர்களும் பரிசுகளை வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் தாளாளரும் காமதேனு குழுமங்களின் தலைவருமான ஆர்.பெருமாள்சாமி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சிவானந்தம் மற்றும் துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள், அலுவல பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் வாழ்த்தினார்கள்.