காவிரி ஆற்றில் ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கோரிக்கை
திங்கள், 2 பிப்ரவரி 2009 (13:18 IST)
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் ஆயிரம் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆர்.எம்.பழனிச்சாமி. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், ''ஈரோடு சுற்றுவட்டார மக்களின் தேவையை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று மனுவில் கூறியுள்ளார்.