ஈரோடு அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பா.ம.க. வினர்
ஈரோடு அருகே இலங்கை ராணுவத்தை கண்டித்து பா.ம.க வினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கை ராணுவத்தை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் பா.ம.க. சார்பில் இலங்கையில் போர் நிறுத்தக்கோரி கட்சி பொறுப்பாளர்கள் வீட்டின் முன்னும் கட்சி அலுவலகத்திலும் கருப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.