ம‌ண்டப‌த்‌தி‌ல் 14 செ.‌மீ மழை!

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (16:39 IST)
தெ‌ன் த‌‌மிழக‌த்‌தி‌ன் பல பகு‌திக‌ளிலு‌ம், வட த‌மிழக‌த்த‌ி‌‌ல் ஆ‌ங்கா‌ங்கே ‌சில பகு‌திக‌ளிலு‌ம் நே‌ற்று பல‌த்த மழை பெ‌ய்தது. அ‌திகப‌‌ட்சமாக ராமநாதபுர‌‌ம் மாவ‌ட்ட‌ம் ம‌ண்டப‌த்‌தி‌ல் 14 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்ததாக ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் 12 செ.‌மீ மழையு‌ம், பா‌ம்ப‌னி‌ல் 10 செ.‌மீ மழையு‌ம், த‌ங்க‌‌ச்‌சி மட‌த்‌தி‌ல் 7 செ.‌‌மீ மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட‌ம் அ‌ம்பாசமு‌த்‌திர‌ம், ம‌ணிமு‌த்தாறு, தூ‌த்து‌க்குடி, ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 3 செ.‌மீ மழையு‌ம், கடலாடி, தொ‌ண்டி, தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் சா‌த்தா‌ன்குள‌ம், ‌திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட‌ம் ஸ்ரீவைகு‌ண்ட‌ம், சூர‌ங்குடி ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 2 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌த்‌தி‌ன் தெ‌ன் கடலோர‌ப் பகு‌திக‌ளிலு‌ம், த‌மிழக‌த்‌தி‌ன் ‌பிற பகு‌தி‌க‌ளிலு‌ம், புது‌ச்சே‌ரி‌யிலு‌ம் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்