பிரதீபா பாட்டீலுக்கு கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்து
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:55 IST)
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், உங்களது பிறந்த நாளையொட்டி எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இந்த நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் நீங்கள் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
உங்களது சீரிய தலைமையில் நமது நாடு பல சவால்களை சமாளித்துள்ளது என்று தெரிவித்துள்ள கருணாநிதி, அவற்றை சமாளித்து வெற்றியும் கண்டுள்ளது என்றும் நமது நாடு முன்னேற்றப்பாதையில் வீறுநடை போட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உங்களது நீண்ட கால அனுபவத்தாலும் அறிவாற்றலாலும் இந்தியா நல்ல பயனை அடையும். மகிழ்ச்சியுடன் நீங்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.