திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள மல்லிகைப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுர பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 95 சமத்துவபுரங்கள் ஏற்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்றும் நடப்பாண்டு 25 சமத்துவபுரங்களுக்கான டெண்டர் முடிந்து பணிகள் தொடங்கியுள்ளது என்றார்.