எப்போது தேர்தல் வந்தாலும் வெற்றி: இல.கணேசன்

நலத்திட்டங்களில் திருப்தி இல்லாத மாகாணங்களில் மக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன், ம‌த்‌திய அரசு எல்லா துறையிலும் தோல்வி கண்டுள்ளது எ‌ன்று‌ம் தேர்தல் வந்தாலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவ‌ரவெளியிட்டுள்ள அறிக்கையில், பெருகி வரும் பயங்கரவாதம் குறித்தும், குறிப்பாக மும்பையில் நவம்பர் 26ஆ‌ம் தேதியன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மக்களிடம் விளக்கவும் பயங்கரவாதத்தை ஒடுக்க அரசு கடுமையான சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 10ஆ‌ம் தேதி (இன்று) முதல் இருவார காலம் பிரசார இயக்கம் நடைபெறும்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் பார‌திய ஜனதா கட்சி 2 மாநிலங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் ஒரு மாகாணத்தை தக்க வைத்துள்ளது. ராஜஸ்தானில் பா.ஜ.க. வாங்கிய ஓட்டுகள் காங்கிரசை விட 3 ‌விழு‌க்காடு அதிகம். ராஜஸ்தானில் காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

டெல்லியில் கடந்த தேர்தலை விட பா.ஜ.க. கட்சி அதிக இடங்களும் அதிக வாக்குகளும் பெற்றுள்ளது. ஆனால் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ளது. 5 மாகாணங்களில் மொத்தமாக பா.ஜ.க. 293 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களு‌ம், காங்கிரஸ் 279 ச‌ட்டம‌ன்ற உறு‌‌ப்‌பின‌ர்களு‌ம் வெற்றி பெற்றுள்ளனர்.

நலத்திட்டங்களில் திருப்தி இல்லாத மாகாணங்களில் மக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். மத்திய அரசு எந்த துறையிலும் சிறப்பாக செயல்படவில்லை. எல்லா துறையிலும் தோல்வி கண்டுள்ளது. எனவே எப்போது தேர்தல் வந்தாலும் பார‌திய ஜனதா கட்சி வெற்றி பெறும் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.