அம்பேத்கார் ‌‌நினைவு ‌தின‌ம் அனுச‌ரி‌ப்பு

சனி, 6 டிசம்பர் 2008 (15:29 IST)
ச‌ட்ட மேதை டா‌க்ட‌ர் அ‌ம்பே‌த்கா‌ரி‌ன் 52வது ‌‌நினைவு ‌தின‌ம் இ‌ன்று த‌மிழக‌ம் முழுவது‌ம் அனுச‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.‌வி.தங்கபாலு தலைமையில் செ‌ன்னதுறைமுகம் எதிரில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு கா‌ங்‌கிரசா‌ர் மாலை அணிவி‌த்து ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

இ‌ந்த ‌‌நிக‌‌ழ்‌ச்‌சி‌யி‌ல் சட்ட‌ப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம், முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, ச‌‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் யசோதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து செ‌ன்னை சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கார் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்து‌‌ப்ப‌ட்டது.

ா.ஜ.க. தலைவர் இல.கணேசன், திருநாவுக்கரசர் ஆகியோர் செ‌ன்னை துறைமுக‌த்‌தி‌ல் உ‌ள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை‌யி‌ல் அ‌க்க‌ட்‌சி‌யின‌ர் அம்பேத்கார் மணிமண்டபத்‌தி‌ல் உ‌ள்ள அவரது ‌சிலை‌க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து செ‌ன்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து ம‌ரியாதை செலு‌த்‌தினா‌ர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை‌யி‌ல் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் உ‌ள்பட க‌ட்‌சி ‌நி‌ர்வா‌கிக‌ள் கோய‌ம்பே‌ட்டி‌ல் உ‌ள்ள அ‌ம்பே‌த்கா‌ர் ‌சிலை‌க்கு மாலை அ‌ணி‌வி‌த்து ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்