வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய சிறிது காலம் ஆகும் என்பதால் வேளாண்துறை, அவர் கவனித்த வந்த துறைகள் தற்காலிகமாக அமைச்சர் கே.என்.நேருவுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையுடன் இதையும் சேர்த்து அமைச்சர் நேரு கவனிப்பார் என்றும் முதலமைச்சர் கருணாநிதி ஆலோசனைப்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.