பிரபாகரன் பிறந்தநா‌ள் : திருமாவளவன் விளக்கம்

இயக்க தோழர் ஒருவரின் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டியபோது `கேக்' வெட்டப்பட்டது எ‌ன்று‌‌ம் அந்த வேளையில் திடீரென சில தோழர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் வாழ்க என்று முழக்கமிட்டனர் எ‌ன்று‌ம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ‌விள‌க்கம் அளித்துள்ளார்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மாலை (26ஆ‌ம் தேதி) சென்னை மொமோரியில் அரங்கில் 'தமிழ் உயிர்' என்னும் ஓவிய கண்காட்சிக்கான தொடக்க விழா நடந்தது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் பயங்கரவாத வன்கொடுமைகளை விளக்கும் ஓவியங்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அந்த விழாவில் இயக்க தோழர் ஒருவரின் பெண் குழந்தைக்கு "தமிழ் ஓவியா'' என்று பெயர் சூட்டினேன். அப்போது `கேக்' வெட்டப்பட்டது. அந்த வேளையில் திடீரென சில தோழர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

உடனடியாக அவர்களை கடிந்து எச்சரித்து அப்புறப்படுத்தினேன். எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றை ஊதி பெருக்கி அரசியல் ஆக்க சிலர் முயற்சிப்பதாக தெரிகிறது.

ஓவிய கண்காட்சி, குழந்தைகள் பெயர் சூட்டுதல் ஆகிய நிகழ்வுகளை திசை திருப்பி தேவையற்ற குழப்பத்தை உருவாக்கிட நடைபெறும் சதி முயற்சிகளை பொருட்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கும், தமிழக அரசுக்கும் விடுதலை சிறுத்தைகள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.