இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலைக்கும், தாக்குதலுக்கும் ஆளாகி அல்லல்பட்டு வரும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று கடந்த ஜுலை மாதம் எனது தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்தோம்.
அப்போது இலங்கையில் நடைபெறப் போகும் சார்க் மாநாட்டின் போது இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் இதுகுறித்து நேரில் பேசி நடவடிக்கை எடுப்பேன் என்று பிரதமர் உறுதியளித்தார்.
அதன்படி தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது. இருந்த போதிலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பிடிபட்டுச் சென்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது.
எனவே அது தொடர்பாக தலையிட்டு மீனவர்களும், அவர்களது படகுகள் மற்றும் உடமைகளும் விடுவிக்கப்பட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கும், அயலுறவுத்து துறை அமைச்சருக்கும் கடிதங்கள் எழுதியுள்ளேன்" என்று தங்கபாலு தெரிவித்துள்ளார்.