நம்பியார் உடல் இன்று தகனம்!

வியாழன், 20 நவம்பர் 2008 (11:18 IST)
சென்னையில் நேற்று மரணம் அடைந்த நடிகர் எம்.என். நம்பியாரின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

முன்னதாக கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் நம்பியாரின் பூத உடலுக்கு, முன்னாள் முதல்வரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, நடிகர்கள் ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த், நடிகை கே.ஆர். விஜயா உட்பட திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நம்பியாரின் மகள் அமெரிக்காவில் இருந்து இன்று பிற்பகலில் சென்னை வருகிறார். அதன்பின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று மாலைவாக்கில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நம்பியாரின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

மறைந்த நம்பியாருக்கு ருக்மணி என்ற மனைவியும், சுகுமாறன் நம்பியார், மோகன் நம்பியார் ஆகிய 2 மகன்களும், சினேக லதா என்ற மகளும் உள்ளனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நம்பியார், தமிழ்த் திரையுலகில் வில்லன் நடிகர் என்ற தனி முத்திரையைப் பதித்தவர். சபரிமலைக்கு 65 ஆண்டுகள் சென்று வந்ததால், மகா குருசாமி என்று அழைக்கப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்