தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் - வானிலை!

வியாழன், 20 நவம்பர் 2008 (05:25 IST)
தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ சில இடங்களில் பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்