தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்!

வியாழன், 20 நவம்பர் 2008 (10:53 IST)
சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உ‌ள்ளதாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு இய‌க்க‌ப்படு‌மசிறப்பு ரயில் (எ‌‌ண். 0681) நவ‌ம்ப‌ர் 22, 27, 29 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வ‌ம்பர் 23, 28, 30 ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இய‌க்க‌ப்படு‌மசிறப்பு ரயில் (0682) தூ‌த்து‌க்குடி‌யி‌ல் இரு‌ந்து இரவு 9.15 மணிக்கு புற‌ப்ப‌ட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு எழும்பூரு‌க்கு வ‌ந்து சேரு‌ம்.

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 25ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌மசிறப்பு ரயில் (0615) எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து இரவு 6.40 மணிக்கு புற‌ப்ப‌ட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவி‌ல் செ‌ன்று சேரு‌ம்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு மதியம் 1.30 மணிக்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு எழும்பூ‌ர் வ‌ந்து சேரு‌ம்.

சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரத்திற்கு டிசம்பர் 1ஆ‌ம் தேதி மாலை 4.30 மணிக்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு ராமே‌ஸ்வர‌ம் செ‌ன்று சேரு‌ம்.

சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு 21ஆ‌ம் தேதி இரவு 10.20 மணிக்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7 மணிக்கு கோவை செ‌ன்று சேரும.

மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் 23ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு கோவை‌யி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்‌ட்ர‌ல் வ‌ந்து சேரு‌ம்.

சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் 23ஆ‌ம் தேதி இரவு 10.20 மணிக்கு செ‌‌ன்‌ட்ர‌லி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்டு மறுநாள் காலை 7 மணிக்கு கோவை செ‌ன்று சேரு‌ம்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்