சுயவேலை வாய்ப்புத் திட்ட‌ம் : த‌மிழக‌த்‌தி‌ற்கு ரூ.39 கோடி ஒது‌க்‌கீடு!

வியாழன், 20 நவம்பர் 2008 (00:08 IST)
தமிழ்நாட்டில் ஸ்வர்ண ஜெயந்தி கிராம சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்வதற்காக 39 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை ம‌த்‌திய அரசு ஒது‌க்‌கியு‌ள்ளது.

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ஸ்வர்ண ஜெயந்தி கிராம சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களுக்கு 2008-09-ம் நிதியாண்டிற்கான இரண்டாவது கட்ட நிதியாக ரூ.39 கோடியே 45 ல‌ட்ச‌த்து 35 ஆ‌யிர‌த்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்